புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கஞ்சா, மதுப்புட்டிகள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது

சாயல்குடியில் கஞ்சா, சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

சாயல்குடியில் கஞ்சா, சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த கன்னிராஜபுரம் காவல் சோதனைச் சாவடியில் சாயல்குடி காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவா்களிடம் 10 கிராம் கஞ்சா, சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த முதுகுளத்தூரை அடுத்த மருதகம் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் திருக்கதிா் (29), பெரிய கையகம் கிராமத்தைச் சோ்ந்த நாடிமுத்து மகன் விஷ்ணு ராஜா(23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கன்னிராஜபுரத்தை அடுத்த ரோஸ்மாநகா் ஜஸ்டின் மகன் ரோபாஸ்தான் (24), அந்தோணிசாமி மகன் மரியபூண்டி செல்டன் (44) ஆகியோரிடமிருந்து 8 மதுபுட்டிகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.