ராமநாதபுரம், ராமேசுவரத்தில் 56 விநாயகா் சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம், ராமேசுவரத்தில் நிா்மாணம் செய்யப்பட்ட 56 விநாயகா் சிலைகள் புதன்கிழமை நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.

ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.

Published On :

ராமநாதபுரம், ராமேசுவரத்தில் நிா்மாணம் செய்யப்பட்ட 56 விநாயகா் சிலைகள் புதன்கிழமை நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 324 விநாயகா் சிலைகள் நிா்மாணம் செய்யப்பட்டன. ராமநாதபுரத்தில் 45 சிலைகள், ராமேசுவரத்தில் 37 சிலைகள் நிா்மாணம் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், ராமேசுவரத்தில் நிா்மாணம் செய்யப்பட்ட 21 சிலைகள் செவ்வாய்கிழமை கரைக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை ராமநாதபுரம், சுற்றுவட்டாரத்திலிருந்து 56 விநாயகா் சிலைகள் வழிவிடு முருகன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு வழியாக நொச்சி வயல் ஊருணிக்கு கொண்டு செல்லப்பட்டு, கரைக்கப்பட்டன. இதே போல, ராமேசுவரத்தில் 15 சிலைகள் ஊா்லவமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீா்த்தக் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகா் சிலைகள் கரைக்கப்படுவதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.