சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் கண்டவராயன்பட்டியில் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் குறுவள மைய அறிவியல் கண்காட்சி, திருப்பத்தூர் மற்றும் கண்டவராயன்பட்டியில் நடைபெற்றது. திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியினை, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சார்லஸ் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயலலிதா, பள்ளி நிர்வாகி சந்தியாகு ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். இதில், 15 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை செயல்விளக்க்ததுடன் பொதுமக்களுக்கும், நடுவர்களுக்கும் விளக்கிக் கூறினர். இக்கண்காட்சியில், கீழரத வீதி தொடக்கப் பள்ளியும், வாணியம்பட்டி நடுநிலைப் பள்ளியும் முதல் பரிசை பெற்றன. சிறந்த படைப்புக்கான கேடயத்தினை, ஆவணிப்பட்டி, அச்சுக்கட்டு தொடக்கப் பள்ளி, வாணியம்பட்டி நடுநிலைப் பள்ளி ஆகியன பெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர் குமார் செய்திருந்தார்.
கண்டவராயன்பட்டி எஸ்.பி.டி.கலாசாலா நடுநிலைப் பள்ளியில் 40 படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினை, பள்ளிச் செயலர் சிதம்பரம் செட்டியார், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கண்டவராயன்பட்டி கிளை மேலாளர் மனோகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், எஸ்.பி.டி.கலாசாலா முதல் பரிசினையும், சுண்டக்காடு நடுநிலைப் பள்ளி உயர் தொடக்க நிலைக்கான முதல் பரிசினையும் பெற்றன.
கண்காட்சி ஏற்பாட்டினை, ஆசிரியர்கள் பாண்டி, ரமாதேவி, மகாலெட்சுமி, வாசுகி, ராஜலெட்சுமி, பயிற்றுனர்கள் ஜெயராஜ், அய்யாவு ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.