ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தேசிய சதுரங்கப் போட்டி: ஒடிசா மாநில வீரர் முன்னிலை

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் 32-ஆவது தேசிய அளவிலான 11 வயதுக்குள்பட்டோருக்கான

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் 32-ஆவது தேசிய அளவிலான 11 வயதுக்குள்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில், ஒடிசா மாநில வீரர் ஷிரேயஷ் ஷீவம் பட்நாயக் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
    இப்பள்ளியில், கடந்த ஜூலை 29- ஆம் தேதி முதல் 11 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 
     வியாழக்கிழமை நிலவரப்படி முடிவடைந்த 8 சுற்றுக்களில் 7.5 புள்ளியுடன் ஒடிசா மாநிலத்தின் ஷிரேயஷ் ஷீவம் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அன்னமய் ஷர்மா, அஸ்ஸாமைச் சேர்ந்த ஷாஹில் தேய் ஆகியோர் தலா 7 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளனர்.
   பெண்கள் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ரியன்னா நெட்டா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
    இப்போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. 
அன்று மாலையில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று, செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவர் எஸ்பி. குமரேசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.