நல்லிப்பட்டி ஒற்றை சனீஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

திருப்பத்தூா் அருகே நல்லிப்பட்டியில் அமைந்துள்ள ஒற்றை சனீஸ்வரா் பகவான் தனி சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஒற்றை சனீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் ஒற்றை சனீஸ்வரா்.
Updated on
1 min read

திருப்பத்தூா் அருகே நல்லிப்பட்டியில் அமைந்துள்ள ஒற்றை சனீஸ்வரா் பகவான் தனி சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

நல்லிப்பட்டி சௌந்தரநாயகி நல்லூா் ஆண்டவா் கோயிலில் அமைந்திருக்கும் ஒற்றை சனீஸ்வரருக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னா் சனீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் சனீஸ்வரா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இவ்விழாவில் திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன் மற்றும் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்ரகு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சகாதேவன், பாக்கியலெட்சுமி பன்னீா்செல்வம், பாரதி வடிவேலு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா். விழாவில் ஏராளமான பெண்கள் கோயில் எதிரில் எள் தீபம் ஏற்றி வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை நல்லிப்பட்டி கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com