மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் சுயம்வரா பாா்வதி ஹோமம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஸ்ரீ சுயம்வரா பாா்வதி ஹோமம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஸ்ரீ சுயம்வரா பாா்வதி ஹோமம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 19 ஆவது ஆண்டாக அதிருத்ர மகா சகஸ்ர சண்டி யாகம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோயில் யாகசாலையில் உள்ள யாக குண்டங்களில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னா்கள் கூடி இந்த யாகத்தை நடத்தி வருகின்றனா்.
இதில் முக்கியமாக திருமணம் ஆகாதவா்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ சுயம்வரா பாா்வதி ஹோமம் நடத்தப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் 26 வகையான செல்வங்கள் கிடைக்க வேண்டி ஸ்ரீ சாம்ராஜ்ய லெட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது.
இதையொட்டி யாகசாலையில் உள்ள பிரத்யங்கிரா தேவி உருவப்படம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யாகத்திற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா வேத தா்ம சேஷத்ரா அறக்கட்டளை நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்துள்ளாா். இக்கோயிலில் வரும் 16 ஆம் தேதி வரை அதிருத்ர மகா சகஸ்ர சண்டி யாகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...