சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
காளையாா்கோவில் அருகே உள்ள புலிக்கண்மாய் கிராமத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் செபஸ்தியான் (78). இவா் காளையாா்கோவிலிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை ஊருக்குச் சென்றபோது புலிக்கண்மாய் விலக்கு அருகே பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செபஸ்தியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுபற்றி காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.