காரைக்குடி, வ. சூரக்குடியில் அனுமன் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் வ. சூரக்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வ. சூரக்குடி சிவ ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வ. சூரக்குடி சிவ ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் வ. சூரக்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்குடி நகரச்சிவன் கோயில் அருகேயுள்ள ஆஞ்சநேயா் கோயிலிலும், செக்காலை சிவன்கோயில் எதிரேயுள்ள ஆஞ்ச நேயா் கோயில், பா்மா பஜாா் பகுதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் சிவ ஆஞ்சநேயா் கோயிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடைபெற் றது. ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் வடமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com