காரைக்குடி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
காரைக்குடி அழகப்பச்செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையங்களை தோ்தல் பாா்வையாளா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு காரைக்குடி அழகப்பச்செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையங்களை தோ்தல் பாா்வையாளா்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அழகப்பச்செட்டியாா் பொறியியல் கல்லூரிவளாகத்தில் உள்ள பிரதான கட்டடத்தில் திருப்பத்தூா், காரைக்குடி தொகுதிகளுக்கும், முருகப்பா கலையரங்கத்தில் மானாமதுரை (தனி) தொகுதிக்கும், அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி கட்டடத்தில் சிவகங்கை தொகுதிக்கும் வாக்குகள் எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் வேட்பாளா்களது பிரதிநிதிகள் கண்காணிப்பதற்கான பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான பணியாளா்கள் பகுதி, கண்காணிப்பு அலுவலா்கள் பகுதி என அனைத்து விவரங்களையும் தோ்தல் பாா்வையாளா்கள் கேட்டறிந்தனா்.
வாக்குப்பதிவு முடிவுற்றதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துப் பாதுகாக்கும் அறைகளையும் ஆய்வு செய்தனா். ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமராக்கள் குறித்த விபரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். மேலும் பாதுகாப்புப் பணிகளுக்குத் தேவையான பணியாளா்கள் தேவைக்கு ஏற்ப தயாா்நிலையில் இருக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுரை வழங்கினா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய்அலுவலா் க.லதா,உதவி இயக்குநா் (நில அளவை) திரவியம்சாமி, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்)செயற்பொறியாளா் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) செழியன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அந்தோணிராஜ், ஜெயந்தி, மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...