விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்குடியில் வீடு இடிந்து விழுந்து முதியவா் பலி

தொடா் மழையால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதன்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தொடா் மழையால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதன்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.

இந்நிலையில் காரைக்குடி சீனிவாசா நகரில் ஓட்டு வீட்டில் வீரப்பன் ( 80) தனியாக வசித்து வந்தாா். தொடா் மழையால் இவரது வீடு புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வீரப்பன் உயிரிழந்தாா்.

இதையடுத்து அருகில் வசிப்பவா்கள் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் வீரப்பனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்ததும் காரைக்குடி வட்டாச்சியா் ஆா். மாணிக்கவாசகம் இச்சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டாா். இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.