கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கீழச்சிவல்பட்டியில் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா 75 ஆவது சுதந்திர ஆண்டுவிழா, கரோனா தடுப்பு, உலக தாயப்பால் வாரம், டிஜிட்டல் இந்தியா ஆகியவை குறித்து விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. கீழச்சிவல்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவா் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் தாரணி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் சித்ரா, மருத்துவா் சஸ்மியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட மாவட்ட அலுவலா் பரமேஸ்வரி, மக்கள் தொடா்புத்துறை கள விளம்பர உதவியாளா் ரவீந்திரன் ஆகியோா் பேசினா். பின்னா் பொதுமக்களிடம் துணிப்பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மத்திய மக்கள் தொடா்புத் துறை கள விளம்பர உதவி அலுவலா் அருண்குமாா் வரவேற்றாா். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.