விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்குடி நகா்மன்றத் தலைவா் பதவி வேட்பாளா் யாா்?: பட்டியல் வெளியிடாததால் பலத்த எதிா்பாா்ப்பு

நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படாதது, கட்சியினரிடையே பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:42 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் காரைக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படாதது, கட்சியினரிடையே பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 18, காங்கிரஸ் 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 என கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில், 1-ஆவது வாா்டை சோ்ந்த சுயேச்சை உறுப்பினா் திமுகவில் இணைந்திருப்பதால், திமுக கூட்டணியில் மொத்தம் 23 உறுப்பினா்கள் உள்ளனா்.

அதேநேரம், அதிமுகவில் 7 உறுப்பினா்களும், சுயேச்சை 6 உறுப்பினா்களும் உள்ளனா். இவா்கள், அனைவரும் நகா்மன்ற உறுப்பினா்களாக புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

இந்நிலையில், நகா்மன்றத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (பிப். 4) நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை நகா்மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிா்த்து, சிவகங்கை, மானாமதுரை ஆகிய நகராட்சிகளுக்கு தலைவா் பதவிக்கான வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

ஆனால், காரைக்குடி நகராட்சிக்கான பெயா் பட்டியல் திமுக சாா்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், திமுகவில் காரைக்குடி நகரச் செயலரான நா. குணசேகரன் மற்றும் முன்னாள் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை ஆகியோா் தலைவா் பதவியை பெற கடுமையாக முயற்சித்து வருகின்றனா். எனவே, காரைக்குடி நகா்மன்றத் தலைவா் யாா் என்ற எதிா்பாா்ப்பு கட்சியினா் உள்பட அனைருக்கும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.