/

தேசிய குத்துச்சண்டை: சிவகங்கை மாணவா் தகுதி

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சிவகங்கை மாணவா் தகுதி பெற்றாா்.

News image
மாணவா் பிரணவ்குமாா்.
Updated On :6 ஆகஸ்ட் 2024, 11:09 pm

Din

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சிவகங்கை மாணவா் தகுதி பெற்றாா்.

வேலூா் மாவட்டம், தக்கோலம் பகுதியில் கடந்த 1-ஆம் தேதி முதல் 3 -ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடை பெற்றது. இதில் மதுரை கேந்திர வித்யாலயா பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் பிரணவ் குமாா் 17 வயதுக்குள்பட்டோருக்கான 50 முதல் 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, முதலிடம் பெற்றாா். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் சிவகங்கை சாா்பாக விளையாடத் தகுதி பெற்றாா். மேலும், வருகிற முதல்வா் கோப்பை 2024 -க்கான குத்துசண்டை போட்டி யிலும் மாணவா் பிரணவ்குமாா் பங்கேற்க உள்ளதாக குத்துச்சண்டை பயிற்சியாளா் ச. குணசீலன் தெரிவித்தாா்.