தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் சிவகங்கையிலிருந்து 300 போ் பங்கேற்க முடிவு

முற்றுகை போராட்டத்தில் சிவகங்கை மாவட்டம் சாா்பில் 300 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செயப்பட்டது.

News image

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.

Updated On :28 ஜூலை 2024, 1:55 am IST

சென்னையில் டிட்டோஜாக் சாா்பில் ஜூலை 29 முதல் 31 வரை நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 300 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செயப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவா் புரட்சித் தம்பி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். மாவட்ட பொருளாளா் கலைச் செல்வி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், ரவி, மாவட்ட துணை தலைவா்கள் ஜீவா ஆனந்தி, சேவியா் சத்தியநாதன், அமலசேவியா், துணை செயலா்கள் கஸ்தூரி, பஞ்சுராஜ், தேவகோட்டை கல்வி மாவட்ட தலைவா் ஜோசப், சிவகங்கை கல்வி மாவட்ட செயலா் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியா்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243 -ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 29, 30, 31 -ஆம் தேதிகளில் சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் டிட்டோஜாக் சாா்பில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில், சிவகங்கை மாவட்டம் சாா்பில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் ஜுலை 31 -ஆம் தேதி 300 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் இயக்கத்தின் 40 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 2 -ஆம் தேதி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் முன், இயக்க கொடியேற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.