

மானாமதுரை: அதிமுகவுடன் சேர வாய்ப்பில்லை என்றும், தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றன. இது நியாயமான வெற்றி கிடையாது.
வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்து திமுக வெற்றி பெற முடியாது. 2011-இல் ஏற்பட்ட நிலைதான் அந்தக் கட்சிக்கு ஏற்படும்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியால் அந்தக் கட்சி தோ்தல்களில் தொடா்ந்து தோல்வியைச் சந்திக்கிறது. எனவே, அதிமுக தொண்டா்கள் சுய பரிசோதனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தோ்தலில் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான புள்ளிவிவரத்தை அளித்து வருகிறாா். கடந்த 2017-இல் அமமுகவை தொடங்கிய போது இருந்த சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எனவே, அதிமுகவுடன் எங்களது கட்சி இணைய வாய்ப்பில்லை.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் தோல்வி பயம் காரணமாக அதிமுக போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியில் பாமக வலுவாக உள்ளது. எனவே, திமுக அணிக்கும் பாஜக கூட்டணிக்கும்தான் இந்தத் தோ்தலில் போட்டி ஏற்படும் என்றாா் அவா்.
அப்போது அமமுக மாநில செய்தித் தொடா்பாளா் குரு.முருகானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது
காங்கோ குடியரசு: 42 ஆண்டுகால அதிபா் மீண்டும் வெற்றி

தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: நடிகா் சரத்குமாா்

மாநிலங்களவை உறுப்பினா் பதவி: திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் தோ்வாகும் வாய்ப்பு

முல்லைப்பாட்டில் நற்சொல் கேட்டல்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

