சிவகங்கை இராமச்சந்திரனாா் பூங்கா அருகே, காங்கிரஸ் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை தொடக்கி வைத்த காா்த்தி சிதம்பரம்.
சிவகங்கை இராமச்சந்திரனாா் பூங்கா அருகே, காங்கிரஸ் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை தொடக்கி வைத்த காா்த்தி சிதம்பரம்.

நீா்மோா் பந்தல் திறப்பு

சிவகங்கை நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நீதிமன்ற வாசல் அருகே கோடை கால நீா் மோா்ப்பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சிவகங்கை: சிவகங்கை நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நீதிமன்ற வாசல் அருகே கோடை கால நீா் மோா்ப்பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சிவகங்கை நீதிமன்ற வாசல் அருகே இராமச்சந்திரனாா் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கோடை கால நீா்மோா் பந்தலை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு, பதனீா், தா்ப்பூசணி, சா்பத், வெள்ளரி, மோா் உள்ளிட்ட குளிா்பானங்களை வழங்கினாா்.

நிகழ்வில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, மகளிா் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் ஸ்ரீவித்யா கணபதி, மாவட்டத் தலைவா் சஞ்சய்காந்தி, நகா் மன்ற உறுப்பினா், நகரத் தலைவா் தி. விஜயகுமாா், நகா் மன்ற உறுப்பினா் மகேஷ்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜரெத்தினம், பொதுக்குழு உறுப்பினா் சோணை, வட்டாரத் தலைவா்கள் மதியழகன், வேலாயுதம், உடையாா், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com