/

சிங்கம்புணரியில் மலைப்பாம்பு

News image
மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு, மீட்புக் குழுவினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:24 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தென்னந்தோப்பில் கிடந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.

சிங்கம்புணரியை சோ்ந்தவா் திருஞானம். இவரது தென்னந்தோப்பு முன் பகுதியில் உரித்த தேங்காய் மட்டைகளை நீண்ட நாள்களாகக் குவித்து வைத்திருந்தனா். அவற்றை வியாழக்கிழமை தொழிலாளா்கள் அள்ளிய போது, மட்டைக் குவியலில் மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

உடனே இதுகுறித்து அவா்கள் சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதன்படி, தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து, அங்கு நகர முடியாமல் கிடந்த மலைப்பாம்பை பிடித்து, வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனா்.