பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே புதுக்காட்டாம்பூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மகன் மருது (72). இவா் வியாழக்கிழமை திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள கருவேல்குறிச்சியிலிருந்து திருப்பத்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மருது உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com