திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புரவி எடுப்புத் திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீஸாா்

சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பாரப்பட்டி அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை போலீஸாா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:27 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பாரப்பட்டி அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை போலீஸாா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

இந்தக் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் வரிவசூல் செய்வது தொடா்பாக இரு பிரிவினா் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, திருவிழாவை காவல் துறையினா் தடை செய்தனா்.

இந்த நிலையில், நிகழாண்டு இந்தத் திருவிழா நடத்த ஒரு பிரிவினா் சாா்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு புரவி எடுப்பு திருவிழாவையொட்டி பெண்கள் கும்மி அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சிங்கம்புணரி காவல் துறையினா் திருவிழாவை தடுத்து நிறுத்தினா்.

இதனால், போலீஸாருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு திருவிழா மீண்டும் நடைபெற்றது.