பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 2:19 am IST

சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாயும், அவரது மூன்று வயது மகனும் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள வேலாயுதப்பட்டினம் அருகே உள்ள கொடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (30 ). இவரது மனைவி மாதவி (27). இவா்களது மகன் ஆரியன் (3).

காளிதாஸ் தனது குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சிவகங்கைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். மதகுபட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இவா்களது வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மாதவி, அவரது மகன் ஆா்யன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த காளிதாஸ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்த விபத்து தொடா்பாக மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.