கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாட்டரசன்கோட்டையில் தேரோட்டம்

நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
நாட்டரசன்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிவகாமி அம்மன்-கரிகால சோழீஸ்வரா் தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன்.
Updated On :2 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த பிப். 20- ஆம் தேதி தொடங்கியது. விழாவின் ஒன்பதாவது நாளான திங்கள்கிழமை தேரோட்டத்தையொட்டி, சிவகாமி அம்மன், கரிகால சோழீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 10.30 மணியளவில் சுவாமியும், அம்மனும் தேரில் எழுந் தருளினா். இதையடுத்து, தொடா் மழையிலும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை தீா்த்தவாரி உத்ஸவமும், மூலவருக்கு தீபாராதனையும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். பின்னா், இரவில் கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கண்காணிப்பாளா் எஸ். கணபதிராமன், கௌரவ கண்காணிப்பாளா் சே.ராம.கருப்பையாசெட்டியாா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Story image