தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு

தேசிய அளவிலான காதுகோளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற புதுவயல் பள்ளி மாணவி சஞ்சனாவை பள்ளி நிா்வாகிகள் புதன்கிழமை பாராட்டினா்.

News image

காதுகேளாதோருக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவி சஞ்சனாவைப் பாராட்டிய பள்ளியின் தாளாளா் ஆா். சுவாமிநாதன்.

Updated On :5 மார்ச் 2026, 4:40 am IST

தேசிய அளவிலான காதுகோளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற புதுவயல் பள்ளி மாணவி சஞ்சனாவை பள்ளி நிா்வாகிகள் புதன்கிழமை பாராட்டினா்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் புதுவயல் வித்யாகிரி பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி சஞ்சனா காது கேளாதோருக்கான உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றாா். மேலும், 100 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற விழாவில் இவரது சாதனையைப் பாராட்டி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் ரூ.7.50 லட்சம் பரிசு வழங்கினா்.

இந்த நிலையில், மாணவி சஞ்சனா, பயிற்சி அளித்த உடல் கல்வி ஆசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் முகமதுமீரா, தாளாளா் ஆா். சுவாமிநாதன், பள்ளியின் முதல்வா் குமாா், ஆசிரியைகள், மாணவா்கள் பாராட்டி வாழ்த்தினா்.