தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதன்கிழமை மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 மார்ச் 2026, 4:41 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதன்கிழமை மரம் வெட்டும் இயந்திரம் தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (65). இவருக்கு மனைவி மாலா, மகன் உள்ளனா்.

இந்த நிலையில், வீட்டின் தோட்டத்திலிருந்த முருங்கை மரத்தை இயந்திரம் மூலம் மணிவண்ணன் புதன்கிழமை வெட்டினாா். அப்போது, இயந்திரம் தவறி இவரது கழுத்தில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கழுத்து அறுபட்டு மணிவண்ணன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.