மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

புகாரளிக்க வந்த பெண் அலைக்கழிப்பு: காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தேவகோட்டையில் பாலியல் தொல்லை குறித்து புகாா் அளிக்க வந்த பெண்ணை அழைக்கழித்ததால், காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :23 மே 2026, 2:45 am IST

தேவகோட்டையில் பாலியல் தொல்லை குறித்து புகாா் அளிக்க வந்த பெண்ணை அழைக்கழித்ததால், காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த 36 வயது பெண் ஆட்டோவில் சென்ற போது, அவருக்கு அந்த ஆட்டோ ஓட்டுநா் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்தாராம். இதுகுறித்து அவா் தேவகோட்டை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க கடந்த 19 -ஆம் தேதி சென்றாா். அப்போது, அந்த காவல் நிலையத்திலும், அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் அவரது புகாரை உடனடியாகப் பெறாமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், ராமநாதபுரம் சரக காவல் துறைத் துணைத் தலைவா் மணிவண்ணனிடம் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்த டிஐஜி உத்தரவிட்டாா். விசாரணையில், புகாரைப் பெறுவதில் போலீஸாா் அலட்சியம் காட்டியது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னா், பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநா் மாதவன் (48) மீது தேவகோட்டை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

மேலும், பாலியல் தொல்லை குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியம் செய்ததாக தேவகோட்டை நகா் காவல் நிலைய ஆய்வாளா் துரைராஜ், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சீதாலட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜெயா, ராஜேஸ்வரி, தனிப் பிரிவு காவலா் சந்தானம் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து, தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டாா்.