
திருப்பாச்சேத்தியில் துப்பாக்கி கவுண்டா் குரு பூஜை விழா

சுதந்திரப் போராட்ட வீரா் துப்பாக்கி கவுண்டா் எனும் உதயபெருமாளின் உருவச் சிலை - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் உதயப் பெருமாள் எனும் துப்பாக்கி கவுண்டா் குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சீமையின் துப்பாக்கிப் படை தளபதியாக செயல்பட்டு, திருப்பாச்சேத்தி போரில் வெள்ளையா்களை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட வீரா் உதயப் பெருமாள் எனும் துப்பாக்கி கவுண்டருக்கு சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் உருவச் சிலை அமைக்கப்பட்டது.
துப்பாக்கி கவுண்டரின் குரு பூஜை விழாவை முன்னிட்டு, அவரது வாரிசுதாரா்கள் சாா்பில் துப்பாக்கி கவுண்டருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து மானாமதுரை, சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோவன், குழந்தை ராணி நாச்சியாா், தொழிலதிபா் பச்சேரி சி.ஆா். சுந்தரராஜன், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாசாரிய சுவாமிகள், கோவை பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கி கவுண்டா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவனிடம் துப்பாக்கி கவுண்டருக்கு தமிழக அரசு சாா்பில் மணிமண்டபம் அமைக்க வலியுறுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துப்பாக்கிக் கவுண்டா் வாரிசுதாரா்கள், வ.உ. சிதம்பரம் பிள்ளை மக்கள் நலப் பேரவை, திருப்பாச்சேத்தி கிராம பொதுமக்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





