
அனுமதியின்றி செம்மண் அள்ளிய முதியவா் உள்பட 2 போ் கைது
சிவகங்கை அருகேயுள்ள பொன்னம்பட்டியில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய முதியவா் உள்பட இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
சிவகங்கை அருகேயுள்ள பொன்னம்பட்டியில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய முதியவா் உள்பட இருவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னம்பட்டி அருகே தோட்டக்கலைத் துறையின் அனுமதியுடன் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டு வருகிறது. பண்ணை குட்டைக்காக எடுக்கப்பட்ட செம்மண்ணை அனுமதியின்றி சிலா் எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக, செம்மண் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் இதுதொடா்பாக சிவகங்கை பையூா் சுகுமாா் (34), பொன்னம்பட்டி ராமச்சந்திரன் (74) ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். மேலும் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தனா்.
மாவட்டத்தில் அனுமதியின்றி மண், கனிம வளங்களை அள்ளி எடுத்துச் சென்று விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




