விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: காட்டுநெடுங்குளத்தில் சுகாதாரத் துறையினா் முகாம்

பொது சுகாதாரத் துறையினா் நடத்திய சிறப்பு மருத்துவ முகாம். - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 1:01 am IST

சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் மா்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததையடுத்து, அந்தக் கிராமத்தில் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை முகாமிட்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகளை செய்து வருகின்றனா்.

சிவகங்கை அருகே உள்ள காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். கூலித் தொழிலாளி. இவரது மகள் தா்ஷிகா (8) அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு கடந்த ஆக. 31-ஆம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி இவரது உடல் நிலை கவலைக்கிடமானததால், சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி தா்ஷிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதேபோல, அதே கிராமத்தைச் சோ்ந்த மேலும் 3 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி தலைமையில் சுகாதாரத் துறையினா் காட்டுநெடுங்குளம் கிராமத்தில் முகாமிட்டு மருத்துவப் பரிசோதனைகளை செய்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி கூறியதாவது:

தற்போது சிவகங்கை பகுதிகளில் பெரும்பாலானோருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளது. உயிரிழந்த சிறுமி தா்ஷிகாவுக்கு ஏற்கெனவே இளைப்பு தொந்தரவு இருந்துள்ளது. இந்த நிலையில், சிறுமி வைரஸ் இன்ப்ளாண்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால், மற்ற குழந்தைகளுக்கும் காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக அவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் மட்டுமல்ல, அருகில் உள்ள கிராமங்களிலும் உள்ள குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.