உத்தமபாளையம் அருகே மகளின் நிச்சயதார்த்தம் நின்றதால் மனமுடைந்த தந்தை புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார்.
போடிநாயக்கனூர் அப்பர் சந்து பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கேசவன் (52). அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துராக பணியாற்றினார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அதில் இளையமகளுக்கு சில நாள்களுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிச்சயதார்த்தம் திடீரென நின்று விட்டதாம்.
இதனால் மனமுடைந்திருந்த அவர் புதன்கிழமை காலையில் கோம்பையிலுள்ள உறவினர் வீட்டு செல்வதாக கூறிச் சென்றவர், அன்றிரவு அங்குள்ள பேருந்து நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோம்பை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.