கம்பம் அருகே கம்பம்மெட்டு மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிளும், டேங்கர் லாரியும் மோதியதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (28), இவரது மனைவி கார்த்திகா (25). இருவரும் கேரள மாநிலம் கட்டப்பனை அருகே உள்ள வல்லக்கடவு, ஏலக்காய் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜெகன், கம்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு, கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் மனைவி கார்த்திகாவுடன் சென்றார்.
கம்பம்மெட்டு மலைச்சாலையின் 16 ஆவது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது கம்பம்மெட்டிலிருந்து, கம்பம் நோக்கி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் அவர்கள் இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு ராம்ஜி நகரைச் சேர்ந்த லோகேஷ் (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

