ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தேவாரத்தில் பெண் கொலை: ஜீப் ஓட்டுநர் கைது

தேவாரத்தில் பெண்ணைக்  கொலை செய்ததாக  ஜீப் ஓட்டுநரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:10 am IST

தேவாரத்தில் பெண்ணைக்  கொலை செய்ததாக  ஜீப் ஓட்டுநரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போடியை அடுத்த தேவாரம் அமராவதி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சரணமணி (40). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்ததால் சரணமணி கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கேரளத்தில் உள்ள ஏலத் தோட்ட வேலைகளுக்கு தினமும் ஜீப் மூலம் சென்று வந்தார். இந்நிலையில் சில தினங்களாக அவரைக் காணவில்லை. அவரது வீடு பூட்டியிருந்த நிலையில் அவரது தங்கை கார்த்திகா செல்வி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், சரணமணி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.  இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது பூட்டிய வீட்டிற்குள் சரணமணி வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவாரம் போலீஸார் விசாரணை செய்ததில், ஜீப் ஓட்டுநரான தேவாரம் திடீர்புரத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (35) என்பவருக்கும் சரணமணிக்கும் ஜீப்பில் வேலைக்கு சென்று வரும்போது பழக்கம் ஏற்பட்டதும், அடிக்கடி சரணமணி வீட்டுக்கு ஆண்டிச்சாமி வந்து சென்றதும் தெரியவந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், சரணமணியை  ஆண்டிச்சாமி கொலை செய்திருக்கலாம் எனக் கருதிய போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.