இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கம்பத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  கம்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  கம்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 தேனி மாவட்டம் கம்பம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் தவமணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.  மாவட்ட இணைச்செயலாளர் குமரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில் மாநிலச் செயலாளர் பேயத்தேவன் பேசியது:
 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம்  பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க 
வலியுறுத்தியும், மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுக
ளின்படி நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, தமிழக முதல்வரின் கவனத்தை  ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  
முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.
சின்னமனூர்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் முன்பு வட்டார தலைவர் சாந்தி தலைமையில்,  மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சத்துணவு 
ஊழியர்கள்  கலந்துகொண்டனர்.   
அதில் சத்தணவு ஊழியர்களின் கால முறை ஓய்வுதியத்தை வரையறை செய்ய வேண்டும்.  பணிக்கொடை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வட்டார செயலர் முருகன்  நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.