ஆண்டிபட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சண்முகசுந்தரபுரம் ஊராட்சிக்குள்பட்ட வேலாயுதபுரம் கிராமத்துக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குன்னூர் வைகை ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
மேலும் ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், 3 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குடிநீர் வழங்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ஆழ்துளை கிணற்றிலும் நீர் போதுமான அளவில் இல்லை. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெண்கள் குடிநீருக்காக வெகு தொலைவில் உள்ள தனியார் தோட்டங்களுக்குச் சென்று விவசாய கிணறுகளில் இருந்து நீர் எடுத்து வர வேண்டி உள்ளது. ஒருசில நேரங்களில் அங்கும் தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனஅவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக இக்கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரஸ்பர தாக்குதல் கூடாது: இஸ்ரேல், ஈரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

12-ஆம் வகுப்பு விடைத்தாள் கொள்முதல் நடைமுறைகள்: ஆா்டிஐ-யின்கீழ் வெளியிட சிபிஎஸ்இ-க்கு உத்தரவு

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! ஸ்மிருதி, தீப்தி, சரணி அசத்தல்!!

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்: இந்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


