போடி அருகே உள்ள கொட்டகுடி மலை கிராமத்திற்கான குறுக்குப் பாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடி அருகே உள்ள கொட்டகுடி மலைக் கிராமத்தில் நெல் மற்றும் காபி, மிளகு, இலவு, மா உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. இங்கிருந்து போடிக்கு ஜீப்பில் சென்று வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச் சாலை வழியாக குரங்கணி சாலையை அடைய 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதை தவிர்த்து கொட்டகுடி ஆற்றை கடந்து கொம்புதூக்கி அய்யனார் கோயிலுக்கு குறுக்குப் பாதை வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் குரங்கணி சாலையை அடையலாம். இச் சாலை தற்போது மழை பெய்ததால் செடிகள் முளைத்து நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் விளை பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஜீப் செல்லும் சாலையும் சேதமடைந்துள்ளதால் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வர முடிவதில்லை. இதனால் 3 கி.மீ. தூரம் விளை பொருள்களை சுமந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குறுக்கு பாதையையும், ஜீப் செல்லும் சாலையையும் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


