வீரபாண்டியில் சித்திரை திருவிழாவில் பக்தர்களிடம் பணம் திருடியதாக 3 பேரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
மதுரை, பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் வருதையத்தேவர் மகன் பழனிச்சாமி (50). இவர், வீரபாண்டிக்கு சித்திரை திருவிழாவை காண வந்திருந்தார். அங்கு, முல்லைப் பெரியாற்றங்கரையில் நின்றிருந்த அவரிடம் வருஷநாடு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இருளாண்டி மகன் செல்லப்பா (36), செல்வம் மகன் காளீஸ்வரன்(29) ஆகியோர் ரூ.150-ஐ திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்த பழனிச்சாமி, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து செல்லப்பா, காளீஸ்வரன் ஆகியோர் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதே போல, வீரபாண்டியில் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (56) என்பவர் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.200-ஐ, திருச்சி மாவட்டம், பொங்கலூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யோகராஜ் (22) என்பவர் திருடினாராம். அவரை முருகேசன் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து யோகராஜை கைதுசெய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

முந்திரியில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலை! செந்துறை விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

பெரம்பலூா் மாவட்டத்தில் தூா்ந்து வரும் ஏரிகள்! சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


