கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழுவினர் இன்று ஆய்வு

தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், பருவ நிலை மாறுபாடுகளை கண்டறிய துணைக்குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை (மே 10) ஆய்வு நடத்துகின்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், பருவ நிலை மாறுபாடுகளை கண்டறிய துணைக்குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை (மே 10) ஆய்வு நடத்துகின்றனர்.
இந்த அணையில் பருவநிலை மாறுபாடு, தென்மேற்கு பருவமழை தொடக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மாதத்துக்கு 2 முறை இத்துணைக்குழுவினர் ஆய்வு நடத்துவர். அதன்படி, வியாழக்கிழமை இந்த ஆய்வு நடைபெறுகிறது.
இத்துணைக்குழுவில் மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ், தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் ராஜகோபால், கேரள அரசு சார்பில்  நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் ஷாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரஜித். என் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் வியாழக்கிழமை காலையில் தேக்கடி ஏரி வழியாக சென்று முல்லைப் பெரியாறு அணையின் பிரதான அணை, பேபி அணை, 13 நீர் வழிப்போக்கிகள், காலரி பகுதி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
பின்னர் மாலையில் குமுளி 1 ஆம் மைலில் உள்ள பெரியாறு அணை ஆய்வுக்குழு அலுவலகத்தில் பார்வை மற்றும் ஆ ய்வு செய்தவைகள் பற்றி ஆலோசனை செய்து மூவர் குழுவுக்கு முடிவுகளை அனுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.