/

கம்பம் அருகே ஆட்டோ-பைக் மோதல்: விவசாயி சாவு

கம்பம் - கூடலூர் சாலையில் ஆட்டோ-இரு சக்கர வாகனம் வியாழக்கிழமை நேருக்கு நேர் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.

Updated On :25 மே 2018, 5:18 am IST

கம்பம் - கூடலூர் சாலையில் ஆட்டோ-இரு சக்கர வாகனம் வியாழக்கிழமை நேருக்கு நேர் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் விவசாயி செந்தில்குமார் (40). இவரும், அண்ணாபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஈஸ்வரன் (38) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை கூடலூரிலிருந்து கம்பத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வாகனத்தை செந்தில்குமார் ஓட்டி வந்துள்ளார். கம்பத்தைச் சேர்ந்த சேகர் மகன் சரண்ராஜ் (26) என்பவர், கம்பத்திலிருந்து கூடலூரை நோக்கி பயணிகள் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அப்போது, கம்பம்-கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள அப்பாஜி பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனமும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கிவீசப்பட்டனர்.
ஆட்டோவும் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த செந்தில்குமார், ஈஸ்வரன் மற்றும் ஆட்டோவில் வந்த ஆண்டிபட்டி அருகே தேக்கனூத்தைச் சேர்ந்த பெரிய பழனிவேல் மகன் ரமேஷ் (36) மற்றும் ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்தனர்.
காயமடைந்த 4 பேரையும், கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செந்தில்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த ஈஸ்வரன், ரமேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், லேசான காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சரண்ராஜ், கம்பம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார்.
இது குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.