100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மதுரை காமராஜர் பல்கலை. மண்டல அளவிலான பூப்பந்து போட்டி: உத்தமபாளையம் கல்லூரி அணி 2 ஆம் இடம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி அணி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மண்டல

Published On :

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி அணி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மண்டல அளவில் நடைபெற்ற பூப்பந்து விளையாட்டு போட்டியில் 2 ஆம் இடம் பெற்றது.
 திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பூப்பந்து போட்டியில் தேனி , திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி அணிகள் கலந்துகொண்டனர். இதில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி அணி சார்பில்,  2 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவு அப்துல் பாசித்,  2 ஆம் ஆண்டு வரலாற்றுத்துறையை சேர்ந்த ஷேக் இப்ராஹீம்,  2 ஆம் ஆண்டு பொருளாதாரத் துறை சேர்ந்த இஜாஜ் அகமது மற்றும் ஹாரிஸ் முகமது, முதலாம் ஆண்டு ஆங்கிலத் துறையைச் சேர்ந்த அன்வர் அப்சல், முகமது நௌபல் ராஜா, முகம்மது  இப்ராஹிம், முதலாம்  ஆண்டு  பி.பி.ஏ. மாணவர்  ஆஜித் அலிம், முதலாம் ஆண்டு வேதியியல் மாணவர் சேக்முகமது உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
 இறுதியில் இப்போட்டியில்  உத்தமபாளையம் கல்லூரி  மாணவர்கள் 2 ஆம் இடத்தை பிடித்தனர்.இந்த விளையாட்டு வீரர்களுக்கு புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முகமது மீரான், கல்லூரி தாளாளரும் செயலர் தர்வேஷ் முகைதீன், கல்லூரி கண்காணிப்பாளர் அப்தாகீர், கல்லூரி விளையாட்டு  இயகுநர் அக்பர் அலி உள்ளிட்ட பலரும் கலந்து வீரர்களை பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.