கம்பம் முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கிய இளைஞர்கள் மீட்பு
முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.


முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
தேனி மாவட்டம், கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாருகேஷ்(16). இவர் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இதே தெருவைச்சேர்ந்தவர் ரூபன்(18), இவர் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நெல்லுகுத்தி புளியமரத்தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த்(17), தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நண்பர்களான மூவரும் ஞாயிற்றுக்கிழமை கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டம்மன்துறை முல்லைபெரியாறு செல்லும் உத்தமுத்து தடுப்பணையில், கோடை வெயிலின் வெப்பத்தை தவிர்க்க குளித்தனர். முல்லைப்பெரியாற்றில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதில் மாணவர்கள் உற்சாகமாக குளித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தண்ணீர் அதிகரித்ததால் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் கரையேறினர். அதே நேரத்தில் மாணவர்கள் தடுப்பணையின் கீழ் நின்றதால் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்த சிலர் கம்பம் தெற்கு காவல் நிலையம், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து தடுப்பணை வெள்ளத்தில் சிக்கிய 3 மாணவர்களையும் கயிறு கட்டி மீட்டனர்.
ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது பற்றி பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அலுவலர்களிடம் கேட்ட போது, பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது, ஆதலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை, அதே நேரத்தில், 3 சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, இவற்றில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறந்து விட்டால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...