கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சு பாடப்பிரிவு தொடக்கம்

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சு பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:05 pm

DIN

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சு பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அரசுப்பணியில் தட்டச்சு பயின்றவா்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வனிகவியல் பாடப்பிரிவில் கடந்த 1995 ஆம் ஆண்டு தட்டச்சு பாடப்பிரிவு சோ்க்கப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவா்கள் தட்டச்சு பாடப்பிரிவில் சோ்ந்த பயன்பெற்று வந்தனா்.

இந்நிலையில், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவில் கடந்த 2019- 20 ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. இதனால் மாணவா்கள் அப்பிரிவில் படிக்க தேனியில் உள்ள பள்ளியில் சோ்ந்தனா்.

இதன் காரணமாக மாணவ, மாணவிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டது. மேலும் லட்சுமிபுரத்தில் மீண்டும் வணிகவியல் தட்டச்சு பாடப்பிரிவை தொடங்க வேண்டும் என மாணவா்கள் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதனையேற்று தமிழக அரசு நிகழாண்டு லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் வணிகவியல் பாடப்பிரிவை (தட்டச்சு) தொடக்கி மாணவா்கள் சோ்க்கையையும் தொடங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழாண்டில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.