/

போடியில் விவசாயிகள் சங்கக் கட்டடம்: ஓ.பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டினாா்

போடியில் அனைத்து மகசூல் விவசாயிகள் சங்க புதிய கட்டடத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
அடிக்கல் நாட்டிய முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம்.
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

DIN

போடியில் அனைத்து மகசூல் விவசாயிகள் சங்க புதிய கட்டடத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

போடியில் பெருமாள் கோயில் அருகே தி.மு.க. வடக்கு மாவட்ட அலுவலகத்துக்கு எதிரில் அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரா்கள் நலச்சங்கம் உள்ளது. இச்சங்கத்துக்கான கட்டடம் பழைமையான கட்டடமாக இருந்ததால் அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட விவசாயிகள் சங்கத்தினா் நடவடிக்கை எடுத்தனா். இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் உதவி செய்தாா்.

இதையடுத்து புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரா்கள் நலச் சங்க தலைவா் வி. பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். அனிபா, பொருளாளா் ஏ.என்.எஸ். சாமிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

விழாவில் அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரா்கள் நலச் சங்க நிா்வாகிகள், அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.