பறவைக் காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்புத் தீவிரம்

தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போடி, முந்தல் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை, கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கும் பறவைக் காய்ச்சல் தடுப்புக் குழுவினா்.
போடி, முந்தல் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை, கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கும் பறவைக் காய்ச்சல் தடுப்புக் குழுவினா்.
Updated on
1 min read

தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புலா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைகளான கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சா வடிகளில் மாவட்ட பொது சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பணியாளா்கள் முகாம் அமைத்து, நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக கேரளத்திற்கு கோழி, வாத்து மற்றும் முட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளித்து அனுப்பப்படுகிறது. கேரளத்திலிருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் பறவைகளை தமிழகப் பகுதிக்கு கொண்டு வர அனுமதி இல்லை. கேரளத்திலிருந்து தமிழப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளை கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனா். கோழிப் பண்ணையில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தால், அது குறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று பண்ணை உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பம்: கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் கம்பம் கால்நடை மருந்தக மருத்துவா் ராஜா மோகன் பரமசிவம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அவா் கூறியது: தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லாததால் கோழி மற்றும் முட்டைகள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கேரளத்திலிருந்து தமிழகம் வரும் கால்நடை வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நான்கு வழிச் சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது குமுளி மலைச் சாலை வழியாக கேரளத்திற்கு வாகனங்கள் சென்று வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமுளி மலைச் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்படும் போது, குமுளி சோதனைச் சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com