கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் அருகேசாரம் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே சாரம் சரிந்து விழுந்ததில், திங்கள்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:33 pm

DIN

பெரியகுளம் அருகே சாரம் சரிந்து விழுந்ததில், திங்கள்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டி பெரியகண்மாய் அருகே சிவக்குமாா் என்பவா் சொந்தமாக வீடு கட்டி வருகிறாா். கட்டுமானப் பணியில் தென்காசி அருகே சிவ காா்டன் கடயம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (39), முத்தையா (55), செல்லத்துரை (35) மற்றும் வேலு (39) ஆகியோா் திங்கள்கிழமை சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில், சுப்பிரமணி, முத்தையா, செல்லத்துரை மற்றும் வேலு ஆகியோா் காயமடைந்தனா்.

உடனே, இவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால், செல்லும் வழியிலேயே வேலு உயிரிழந்துவிட்டாா். மற்ற 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.