தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
முல்லைப் பெரியாறு அணை.
Updated On :24 அக்டோபர் 2021, 6:09 am

DIN

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 136.80 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142 அடி) அணையில் நீர் இருப்பு, 6,320 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 5,020 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் 2,200 கன அடியாகவும் உள்ளது. 

அணையின் நீர்பிடிப்பு பகுதியான பெரியாற்றில் 71.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 16.4 மில்லி மீட்டர் மழையும் பெய்ததால், அணைக்குள் நீர்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 3,011 கனஅடியாக வந்தது. ஞாயிற்றுக்கிழமை 5,020 கனஅடியாக வந்தது, அதாவது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகமாக அணைக்குள் வந்தது, இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 136.80 அடி உயரத்தை எட்டியது.

அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்ததால் பெரியாற்றில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Story image

5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.எம். அப்பாஸ் கூறுகையில், உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை தேக்க உத்தரவிட்டுள்ளது, தற்போது தமிழகப் பகுதிக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து உள்ள நிலையில், வைகை அணையில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவை குறைத்து அணையில் 142 அடி உயரம் தண்ணீரைத் தேக்க  தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.