உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும், முகாம் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் 8 ஊராட்சித் தலைவா்கள், தலா ஒரு ஊராட்சி ஒன்றிக் குழு தலைவா் மற்றும் நகராட்சித் தலைவா், 3 பேரூராட்சித் தலைவா்கள், தலா ஒரு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் நகராட்சி ஆணையா், 3 பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆக.15-ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுந்தந்திர தின விழாவின் போது, அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா்.