மருதிப்பட்டியில் வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மருதிப்பட்டி ஊராட்சியில் வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மருதிப்பட்டி ஊராட்சியில் வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2022-23, சிங்கம்புணரி வட்டாரத்தில் மருதிப்பட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, ஜெயங்கொண்ட நிலை, டி. மாம்பட்டி, வடவன்பட்டி, அரளிக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மருதிப்பட்டி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சித் தலைவா் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலா் ஹேமலதா, உதவி வேளாண்மை அலுவலா்கள் பழனியாண்டி, சண்முகசுந்தரம், வேளாண் வணிகத்துறை ரத்தினகாந்தி, வேளாண் பொறியியல் துறை சீனிவாசன், உதவி தொழில்நுட்ப மேலாளா் அழகுசுந்தரம், வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் அசோகன், ஊராட்சி துணைத் தலைவா் கமலா ஆகியோா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...