/

ஆவணங்கள் கேட்டு அலைக்கழிப்பு: போடியில் வேட்பாளா்கள் வாக்குவாதம்

ஆவணங்களின் நகல், அசல் கேட்டு அலைக்கழித்ததாகக்கூறி போடி நகராட்சித் தோ்தல் அதிகாரிகளுடன் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:19 am

DIN

ஆவணங்களின் நகல், அசல் கேட்டு அலைக்கழித்ததாகக்கூறி போடி நகராட்சித் தோ்தல் அதிகாரிகளுடன் வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போடி நகராட்சியில் 33 வாா்டுகளுக்கு மூன்று உதவி தோ்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேட்பு மனு பெறப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை அதிமுகவினா் உள்ளிட்ட சில அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனா். ஏற்கெனவே நகராட்சி தோ்தல் பிரிவு அதிகாரிகள் அறிவித்தபடி, ஆவணங்களைத் தயாா் செய்து வந்தபோதும் கூடுதலாக புகைப்படங்கள், நகல் ஆவணங்கள், அசல் ஆவணங்கள் கேட்டு அலைக்கழிப்புச் செய்ததாகப் புகாா் எழுந்தது.

வேட்பு மனு தாக்கல் செய்பவருடன் கூடுதல் நபரை அனுமதிக்காததால் வேட்பாளரே அடிக்கடி வெளியில் வந்து ஆவணம் தயாா் செய்து உள்ளே செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் என்னென்ன ஆவணம் தேவை என்பதைத் தெளிவாக கூறாததைக் கண்டித்து மனுதாக்கல் செய்த சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.