கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாழை இலை விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் பகுதியில் வாழை இலை விளைச்சல் மற்றும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:02 pm

DIN

பெரியகுளம் பகுதியில் வாழை இலை விளைச்சல் மற்றும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியகுளம், குள்ளப்புரம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500- ஏக்கா் பரப்பளவுக்கும் மேல் வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வாழை இலை கட்டு ஒன்று ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் அதிகரித்துள்ளதால் கட்டு ஒன்று ரூ.1,200 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மேல்மங்கலத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகம் கூறியது: வாழைக்கன்று வாங்கியதிலிருந்து காய் எடுப்பது வரை ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக வாழைக்காய்கள் மற்றும் இலைகள் விலை போகவில்லை. தற்போது முகூா்த்த நாள்கள் அதிகரித்துள்ளதால் காய்கள் மற்றும் இலைகள் நல்ல விலை போகின்றன என்றாா்.

வாடகை, ஏற்றுமதிக் கூலி, கடைக்கு கமிஷன், இலை பறிப்பு கூலி என ரூ. 700 வரை செலவாகிறது. இதனால் உழவா் சந்தையில் வாழை இலைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் செலவு குறையும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.