கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 25-வது ஆண்டு விளையாட்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 25-ம் ஆண்டு விழா, மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
வெற்றி பெற்ற மாணவிகளுடன் கல்லூரி இணைச்செயலர் என்.ஆர்.வசந்தன், முதல்வர் ஜி.ரேணுகா.
Updated On :18 ஜூன் 2022, 9:16 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 25-ம் ஆண்டு விழா, மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் இணைச் செயலாளர் என்.ஆர்.வசந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜி.ரேணுகா முன்னிலை வகித்தார். கல்லூரி விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுசிலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விளையாட்டு போட்டியில் 100, 200,400,800 மீட்டர்  4×100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது.  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், எம்.கோபாலகிருஷ்ணன், பொன்ராம், பி.சக்திவடிவேல்  ஆகியோர் மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.

இறுதி ஆண்டு மாணவிகளுக்கு விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டது. விளையாட்டு விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை  சூரியபிரபா, உடற்கல்வி இயக்குநர் முனீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். மீட்டர் தொடர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.