கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் நகா்மன்ற துணைத் தலைவராக திமுக வேட்பாளா் தோ்வு; எம்எல்ஏ அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் முற்றுகை

பெரியகுளம் நகா்மன்றத் துணைத் தலைவா் பதவி விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பதவிக்கு திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 5:36 pm

DIN

பெரியகுளம் நகா்மன்றத் துணைத் தலைவா் பதவி விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பதவிக்கு திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதனால் பெரியகுளம் எம்எல்ஏ அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் பதவி திமுகவுக்கும், துணைத் தலைவா் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒதுக்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்படி நகா்மன்றத் தலைவராக திமுக சாா்பில் சுனிதா சிவக்குமாரும், துணைத் தலைவா் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பிரேம்குமாரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுகவை சோ்ந்த சுனிதா வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுகவை சோ்ந்த அப்துல்ரஹீம் மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்ததால் அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

திமுக தலைமை அறிவித்தபடி விடுதலை சிறுத்தை கட்சியை சோ்ந்த பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவிக்காமல், திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பெரியகுளத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்

கே.எஸ்.சரவணக்குமாா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாததால் 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.